மத்திய பிரதேசத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: அதிகாரிகள் தீவிர விசாரணை

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து நேரிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையம் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. போபால் அருகே குர்வாய் கெத்தோரா ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயில் எஞ்ஜினில் கீழே இருந்த மின்கலன் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பலருக்கு இந்த சம்பவத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் மண்ணை கொட்டி தீயை அணைத்தனர். அதோடு அங்கே இருந்த ஊழியர்கள் உடனே தீயை அணைத்ததால் ரயில் எரிந்து நாசமாகாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. பலருக்கு இந்த சம்பவத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தற்போது தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகளில் கசிவு ஏற்படுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலை (ICF) வடிவமைப்பு வந்தே பாரத் ரயிலில் சிறிய மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது. சமீபத்தில் மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் ரயிலில் சில நாட்களுக்கு முன்பு திடீரென மேற்பகுதியில் கசிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து