மத்தியப்பிரதேசத்தில் ஹேண்ட் பிரேக் போடாததால் தூய்மை பணியாளர் மீது மோதிய போலீஸ் வாகனம்: கவன குறைவாக செயல்பட்டதாக கூறி 2 காவலர்கள் சஸ்பெண்ட்

மத்தியப்பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் சாகரில் போலீஸ் எஸ்.சி.வி கார் ஒன்று திடீரென சரிவில் இறங்கி சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்த துப்புரவு பணியாளரை இடித்து தள்ளி பிறகு அங்குள்ள கட்டிடத்தின் மீது கார் மோதி நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்த துப்புரவு பணியாளர்கள் ஓடிவந்து இடித்து தள்ளிய காரில் அடிபட்ட பணியாளரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தலையில் காயம், கை, கால், வயிற்றில் கீறல்கள் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நிகழ்ந்த போது போலீஸ் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளனர். காரில் முறையாக ஹேண்ட் பிரேக் போடாததால் கார் சரிவில் இறங்கி விபத்துக்குள்ளானது. மேலும் அச்சமயத்தில் காரில் ஓட்டுநர் இல்லாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் மற்றொரு போலீஸ் அதிகாரியும் அமர்ந்துள்ள நிலையில் அவரும் காரை கட்டுப்படுத்த முயற்சி செய்தும் கட்டுப்பாட்டை மீறி கார் சரிவில் இறங்கியது. இரண்டு போலீஸ் அதிகாரிகளும் கவனக்குறைவால் இருந்ததால் இச்சம்பவம் நிகந்துள்ளதால் காவல் துறையினர் அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

 

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை