மதுராந்தகம் தொகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம்; அதிமுக மாஜி அமைச்சர்கள் தேர்தலில் நிற்கமுடியாத நிலை: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், நேற்றிரவு மதுராந்தகத்தில் முத்தமிழறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பி.எச்.சத்தியசாய், பொன்.சிவகுமார், கே.கண்ணன், ஜி.தம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுராந்தகம் நகர செயலாளர் கே.குமார் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசுகையில், திமுகவை பொறுத்தவரை வரலாறு என்பது, கட்சித் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டு காலம் கருணாநிதி இருந்துள்ளார். மேலும், இவ்வுலகில் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் சந்திக்க விரும்பாத சோதனைகளை கருணாநிதி சந்தித்துள்ளார். அவர் தனது பேச்சாலும், எழுத்தாலும், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழகத்தில் 5 முறை ஆட்சிக்கு வந்துள்ளார் என்பது வர
லாறு. முன்பெல்லாம் மிட்டாசு மிராசுகள்தான் கார்ப்பரேஷன் கவுன்சிலராக வந்தனர். தற்போது சாமானிய மக்களும் பொறுப்புக்கு வருகிறார்கள் என்றால், அது திமுக போட்ட பாதை என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. வரும் தேர்தல்களில் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தேர்தலில் நிற்கமுடியாத அவலநிலை உள்ளது. ஏனெனில், அவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, மாவட்ட துணை செயலாளர் டி.வி.கோகுலகண்ணன், நகரமன்றத் தலைவர் மலர்விழி குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் நாராயணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்சந்த், உசேன், பேரூர் செயலாளர்கள் விடிஆர்வி.எழிலரசன், ஆ.சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி, பேரூராட்சித் தலைவர்கள் தசரதன், நந்தினி கரிகாலன், நகர மன்ற துணைத் தலைவர் சிவலிங்கம், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் நூருல் அமீன், மாவட்ட கவுன்சிலர் ராஜாராமகிருஷ்ணன், நகர நிர்வாகிகள் காமராஜ், கேசவன், சங்கர், பரணி, மூர்த்தி, கோமதி கபிலன், ராஜா, ஏழுமலை, குருமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் கோமதி பிரபாகரன், அர்ஜுனன் ராதிகா, குமரன்,நதியாமகேந்திரன், ஞானசுந்தரி லட்சுமிபதி, ஜெர்லின் ஜோஸ், சசிகுமார், சரளா தனசேகரன், லட்சுமி கேசவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்