மபி, சட்டீஸ்கர், மிசோரம் 3 மாநில காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: தேர்தல் கமிட்டி இறுதி செய்தது

புதுடெல்லி: மபி, சட்டீஸ்கர், மிசோரம் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இறுதி செய்தது. மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா மாநிலங்களில் நவம்பர் 7 தொடங்கி நவம்பர் 30ம் தேதி வரை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ம் தேதியும், சட்டீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ம் தேதியும், மபியில் 17ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி விட்டது.

எனவே அங்கு வேட்பாளர்களை இறுதி செய்ய காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுனகார்கே தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி, அதிர் ரஞ்சன் சவுத்திரி, டிபி சிங் தியோ உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மபி, சட்டீஸ்கர், மிசோரம் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்தனர். இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்ய மீண்டும் மத்திய தேர்தல் கமிட்டி கூடுகிறது.

Related posts

பயிற்சி மருத்துவர்களின் பேச்சுவார்த்தையை நேரலை ஒளிபரப்பு செய்வதை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

சிவகங்கை மாவட்டத்தில் 4,600 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு

மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் மசாலா பொருட்கள் காலை உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி அசத்தல்