லக்சஸ் இஎஸ்

லக்சஸ் நிறுவனம் புதிய லக்சஸ் இஎஸ் மாடலை அறிமுகம் செய்தள்ளது. ‘கிராப்டட் கலெக்‌ஷன் 2023’ வரிசையில் இடம்பெறும் இந்த காரில், ஸ்கப் பிளேட் இல்யூமிடேட், வெல்கம் லோகோ, குரோம் பூச்சுடன் கூடிய பின்புற விளக்குகள், சீட்டின் பின்பு சாய்ந்து கொள்ள தலையணை என பல்வேறு சிறப்பு அம்சம் மற்றும் வடிவமைப்புடன் உருவாகியுள்ளது. லெக்சஸ் இஎஸ் மாடல் முதன் முதலாக 2017ம் ஆண்டு இந்தியச் சந்தையில் அறிமுகமானது.

இஎஸ் வரிசையில் 300எச் மாடல் 2020ல் முதன் முதலாக இந்தியாவிலேயே அசம்ப்ளிங் செய்து சந்தைப்படுத்தப்பட்டது. இஎஸ் கிராப்டட் கலெக்ஷனில் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 240 வோல்ட் எலக்ட்ரிக் யூனிட் இடம் பெற்றுள்ளது. இவை அதிகபட்சமாக 214 பிஎச்பி பவரையம், 221 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு