விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ரத்து கோரி தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க வைகோ மனு: விசாரணைக்கு ஏற்றது டெல்லி தீர்ப்பாயம்

சென்னை: மதிமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை 2024 மே 14ம்தேதி அன்று மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது. அந்தத் தடை அறிவிப்பின்படி, முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மன்மீத் பிரிட்டம் சிங் அரோரா தலைமையில் சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தை அமைத்து 2024 ஜூன் 5ம்தேதி அன்று ஒன்றிய அரசு மீண்டும் அடுத்த அரசாணையை வெளிட்டது.

அத்தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தீர்ப்பாயத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்க முகாந்திரம் இல்லை என்பதால் தடையை ரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வைகோ தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. ஆகஸ்டு 7ம் தேதிக்கு விசாரணை ஓத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கொடைக்கானலில் பைன் மரக்காடு பகுதியில் சுற்றுலா வேன் விபத்து

ஸ்ரீவைகுண்டம் அருகே கத்தியுடன் இணையதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது