காதல் தோல்வி: வாலிபர் தற்கொலை

 

சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள எஸ் புதூர் பூசாரி கோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன் மகன் திவாகர் (27). இவர் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இதையடுத்து திவாகர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாத காதலித்துள்ளார். இவர்கள் காதலில் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திவாகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை