காதலாக மாறிய பேஸ்புக் நட்பு பாகிஸ்தான் காதலனை கரம் பிடித்தார்: 2 குழந்தைகளுக்கு தாயான உ.பி. பெண்: முஸ்லிமாக மதம் மாற்றம்

பெஷாவர்: பேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவை பார்க்க பாகிஸ்தான் சென்ற அஞ்சு முஸ்லிமாக மதம் மாறி அவரை திருமணம் செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் கைலோர் கிராமத்தை சேர்ந்த அஞ்சு, அரவிந்த் உடன் திருமணமான பிறகு, ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 15 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இதனிடையே, அஞ்சுவுக்கு பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா உடன் கடந்த 2019-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இதனால், ஜெய்ப்பூர் செல்வதாக கூறிவிட்டு, கணவர், குழந்தைகளை பரிதவிக்க விட்டு விட்டு பேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவை பார்க்க பாகிஸ்தான் பறந்தார்.

இவர் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதிக்குள் இந்தியா திரும்புவார் என கூறப்பட்டது. அஞ்சு பேஸ்புக் நட்பை காரணம் காட்டி, பாகிஸ்தான் செல்ல சட்டப்படி விசா பெற்று சென்றுள்ளார். எனவே, அவர் நஸ்ருல்லா வசிக்கும் உப்பர் திர் மாவட்டத்தில் ஒரு மாதம் தங்க மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது. முதல் நாளான திங்களன்று அஞ்சுவும் நஸ்ருல்லாவும் அருகில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தனர். இந்நிலையில், அஞ்சு நேற்று முஸ்லிமாக மதம் மாறி, பாத்திமா என்ற பெயருடன் நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணம் திர் பலா மாவட்ட நீதிமன்றத்தில் நஸ்ருல்லா குடும்பத்தினர் முன்னிலையில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related posts

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!