தாமரை சின்னத்தை பாஜவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும்: மனுதாரருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: நாட்டின் தேசிய மலரான தாமரையை பாஜவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து சமூக ஆர்வலரான டி.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமரை சின்னத்தை பாஜவுக்கு ஒதுக்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறல் உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் விளக்கமாக வாதிடவும் அவகாசம் வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதையடுத்து நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், விளம்பர நோக்குடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறலை நிரூபிக்காவிட்டால் இந்த வழக்கை கடுமையான அபராதத்துடன் தள்ளுபடி செய்வோம் என்று மனுதாரர் தரப்பை நீதிபதிகள் எச்சரித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!