தாமரை மலர்ந்தால் நாடு நாசமாகிவிடும்: ஆம்ஆத்மி மாநில தலைவர் ஆவேசம்

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் நாகப்பட்டினம் அருகே தேவூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,‘அதிமுகவிற்கு வாக்களிப்பதும், பாஜவுக்கு வாக்களிப்பதும் ஒன்று தான். இரண்டு பேரும் கூட்டணி இல்லை என கூறி நம்மை ஏமாற்றி வாக்குகளை பெற்று கொள்வார்கள். வெற்றி பெற்ற பின் ஒன்றாக இணைந்து விடுவார்கள்.

குளத்தில் தாமரை படர்ந்தால் ஆக்சிஜன் செல்லாமல் அங்கு வசிக்கும் மீன்கள் இறந்து குளம் நாசமாக போகும். அதுபோல நாட்டில் தாமரை மலர்ந்தால் நாடு நாசமாகிவிடும். இந்திய நாட்டை பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷாவுடன் இணைந்து விற்பனை செய்து விட்டார். அதை அம்பானியும், அதானியும் வாங்கி விட்டனர். இனி நமது நாட்டில் விற்பனை செய்வதற்கு ஒன்றும் இல்லை,’ என்றார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி