45 ஆண்டுகளாக மாநிலத்தை கொள்ளையடித்தார் ரூ.371 கோடி ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் சந்திரபாபு நாயுடு: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

திருமலை: 45 ஆண்டுகளாக மாநிலத்தை கொள்ளையடித்து, திறன் மேம்பாட்டு ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் சந்திரபாபு என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பேசினார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நிடதவோலுவில் நடந்த அரசு விழாவில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது: 45 ஆண்டுகளாக மாநிலத்தை சந்திரபாபு நாயுடு கொள்ளையடித்தார். திறன் மேம்பாட்டு ஊழலில் அவர் ஆதாரங்களுடன் சிக்கியதால் தான் கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் எம்எல்சி தேர்தலில் அம்மாநிலத்தில் எம்எல்சியின் ஓட்டை, கருப்பு பணத்தை லஞ்சமாக கொடுத்து பெற முயன்றார். அப்போது சந்திரபாபு ஆடியோ மற்றும் வீடியோ டேப் மூலம் சிக்கி அங்கிருந்து இங்கு ஓடி வந்தார்.

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என்று சொன்னவர்கள் யாரும் சந்திரபாபு கைது செய்யப்பட்டதில் சொல்ல முன்வரவில்லை. இந்த ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவர் சந்திரபாபு. எனவே அவரை தவிர்த்து வேறு யாரை கைது செய்வது? ஒரு சாதாரண மனிதன் ஊழல் செய்தால் என்ன தண்டனையோ சந்திரபாபு போன்றவருக்கும் அதே தண்டனை கிடைக்கும். இல்லாத நிறுவனம் இருப்பது போல் போலி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீமென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. திறன்மேம்பாட்டு மோசடியில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்ததில், அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவித்தாலும், அதிகாரிகளுக்கு பதவியில் இருந்த சந்திரபாபு அழுத்தம் கொடுத்து கையெழுத்து போட வைத்து நிதி திருடப்பட்டது தெரியவந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்