லண்டனில் இருந்து நாடு திரும்பிய ராகுல்: மீண்டும் மத்திய பிரதேசத்தில் யாத்திரை

போபால்: லண்டனில் இருந்து நாடு திரும்பிய ராகுல் காந்தி, மீண்டும் மத்திய பிரதேசத்தில் தனது யாத்திரையை ெதாடங்குகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடைசியாக ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், மத்திய பிரதேசத்திற்குள் ராகுலின் யாத்திரை நுழைந்தது. கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று முதல் மத்திய பிரதேத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்கிறார்.

வரும் 6ம் தேதி வரை மொரீனா, குவாலியர், குணா, ராஜ்கர், ஷாஜாபூர், உஜ்ஜைன், தார், ரத்லம் ஆகிய மாவட்டங்களில் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, மீண்டும் ராஜஸ்தானுக்குள் நுழைகிறார். முன்னதாக 5 நாட்கள் யாத்திரை இடைவெளி விட்டதற்கு காரணம், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக ராகுல் காந்தி சென்றார். கடந்த மாதம் 27, 28ம் தேதிகளில் மாணவர்களிடையே உரையாடினார். தற்போது லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு டெல்லி திரும்பினார். லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ராகுல் காந்தி மீண்டும் மத்திய பிரதேசத்தில் இன்று யாத்திரையை தொடங்குகிறார்.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!