டெல்லி: மக்களவை தேர்தல் குறித்து விவாதிக்க அக்டோபர் 9ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. டெல்லியில் அக்டோபர் 9ம் தேதி காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் 84பேரும் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.