“மோடியைத் தேர்ந்தெடுங்கள்”: மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியது பாரதிய ஜனதா கட்சி..!!

டெல்லி: இந்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை பாஜக தொடங்கியுள்ளது. “மோடியைத் தேர்ந்தெடுங்கள்” என்ற கருப்பொருளில் வீடியோ வெளியிட்டு பாஜக பரப்புரையை தொடங்கியது. பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், பயனடைந்த மக்கள் குறித்த காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. சந்திரயான், ராமர் கோயில், நலத்திட்டங்கள் போன்றவற்றை குறிப்பிட்டு வீடியோ மூலம் பாஜக பரப்புரை செய்து வருகிறது. கனவை மட்டும் விதைப்பவர் அல்ல; செயல்வீரராகவும் திகழ்கிறார் பிரதமர் மோடி என பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

Related posts

சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்