மக்களவை தேர்தலில் வெற்றி பெற பாஜக அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறது: மம்தா பானர்ஜி விமர்சனம்

கொல்கத்தா: மக்களவை தேர்தலில் வெற்றி பெற பாஜக அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறது என மம்தா பானர்ஜி விமர்சனம் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்க முறைகேடு, நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று அதிரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் கைது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், வர இருக்கும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற பாஜக அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறது என குற்றம்சாட்டி உள்ளார்.

நாடியா மாவட்டம் சாந்திப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோகத்திட்டத்தை தொடங்கி வைத்த பின் அவர் கூறியதாவது:-கம்பிகளுக்கு பின்னால் என்னை நிறுத்தினால் அதில் இருந்து மீண்டு வருவேன். தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக பாஜக அனைவரையும் சிறையில் தள்ளுகிறது. வர இருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தபோதிலும் எங்களது முன்மொழிவை அவர்கள் நிராகரித்து விட்டனர். அவர்கள் கூட்டணிக்கு உடன்படவில்லை. தேர்தலில் பாஜக வெற்றி பெற சிபிஐ(எம்)வுடன் அவர்கள் இணைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

Related posts

செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது: எஸ்.பி. சாய்பிரனீத் பேட்டி

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கணினி அறிவியல் சங்கம் தொடக்கம்

குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்