தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக 57 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், அடுத்ததாக இறுதிக்கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் ஆகியவை, அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு, 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்புடன், வேட்பாளர்களின் முகவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வரும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. 39 தொகுதிகளுக்கு 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உட்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்