மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு

சென்னை: குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் செயல்படும் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் ரூ64 ல் இருந்து ரூ66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் என அனைத்து அமுல் பால் வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு பால் விலை, சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அமுல் என்பது இந்திய மாநிலமான குஜராத்திலுள்ள ஆனந்த் எனும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும். இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் இயங்கி வருகிறது.

அமுல் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் “விலை மதிப்பற்றது” என்பது பொருளாகும்வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது. அமுல் நிறுவனம் பால், வெண்ணெய், நெய், தயிர், சாக்கலேட்டுகள் ஐஸ்கிரீம் ஆகியவற்றை விற்பனை செய்கிறது. இந்நிலையில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் செயல்படும் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் 64 ல் இருந்து ரூ. 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் என அனைத்து அமுல் பால் வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு பால் விலை, சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

Related posts

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு