சிறையில் இருந்தே வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்… மக்களவை தேர்தலில் கவனிக்க வைத்த 3 வெற்றிகள்!!

டெல்லி : 543 தொகுதிகளை கொண்ட மக்களவையில் பாஜக தலைமையிலான கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் உள்ளடக்கிய இண்டியா கூட்டணி 234 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற சூழலில் பாஜக தனியாக 235 இடங்களிலும் காங்கிரஸ் மட்டும் 100 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால் எந்த கட்சியும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாததால் ஜேடியூ, தெலுங்கு தேசம் உள்ளிட்ட இதர கட்சிகளின் உதவியை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நாடுகின்றன.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் கவனிக்க வைத்த 3 வெற்றிகளை பார்க்கலாம்..

▪️ காலிஸ்தான் அபிமானியான அம்ரித் பால் சிங், அசாம் மாநிலத்தில் சிறையில் இருக்கும் நிலையில் பஞ்சாபின் காதோர் சாஹிப் தொகுதியில் வெற்றியின் விளிம்பில் உள்ளார்.

▪️ UAPA வழக்கில் 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் எஞ்சினியர் ரஷீத், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார்.

▪️ இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங், பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி முகத்தில் உள்ளார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு