மக்களவை கமிட்டிகளின் தலைவர் பதவி பெரும்பாலானவற்றை பாஜ கைப்பற்றும் காங்கிரசுக்கு 3 இடங்கள் கிடைக்கும்

புதுடெல்லி: மக்களவையில் ஒவ்வொரு அமைச்சகங்களுக்கும் உதவி அளிக்கும் விதமாக பல்வேறு கமிட்டிகள் உள்ளன. இதில் தலைவர்கள், உறுப்பினர்களாக எம்பிக்கள் நியமிக்கப்படுவார்கள். மக்களவையில் மொத்தம் 16 கமிட்டிகள் உள்ளன. இதில் பாஜவுக்கு 7 முதல் 8 கமிட்டிகளுக்கான தலைவர் பதவி கிடைக்கும். காங்கிரசுக்கு 3 பதவிகளும், சமாஜ்வாடிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என தெரிகிறது. இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில், அமைச்சகங்கள் தொடர்பான கமிட்டிகளில் மக்களவையில் 16 கமிட்டிகளும், மாநிலங்களவையில் 8 கமிட்டிகளும் உள்ளன.

மக்களவையில் உள்ள 16 கமிட்டிகளில் 8 கமிட்டிகளுக்கான தலைவர் பதவியை பாஜவே கைப்பற்றும். காங்கிரசுக்கு 3 இடங்களும், சமாஜ்வாடிக்கு ஒரு இடமும் கிடைக்கும். இதில், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட வேறு எந்த கட்சிக்கும் கமிட்டி தலைவர் பதவி கிடைக்காது. ஒரு வேளை சபாநாயகர் ஓம் பிர்லா தன்னுடைய உரிமையை பயன்படுத்தினால் இதர கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என்று தெரிவித்தன. பாஜ வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ சிவசேனாவுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படாததால் அந்த கட்சிக்கு ஒரு கமிட்டிக்கான பொறுப்பு வழங்கப்படும் என்றன.

 

Related posts

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு