மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி இறுதியாக உள்ள நிலையில் அவசர ஆலோசனை

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி இறுதியாக உள்ள திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று மாலை 4 மணிக்கு பாமக தலைமை நிர்வாகக்குழு ஆலோசனை நடைபெறுகிறது. பாமக தலைமை நிர்வாகக்குழுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 19 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தை தொடர்ந்து மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் 100 பேர் பங்கேற்கும் கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், வட மாவட்ட பாமக மாநில துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை