மக்களவை தேர்தல் நிதிக்காக மபியை ஏடிஎம் ஆக்க காங்கிரஸ் விரும்புகிறது: பிரதமர் மோடி பிரசாரம்

காண்ட்வா: மத்திய பிரசேத்தில் காண்ட்வாவில் நேற்று நடந்த பிரசார பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:காங்கிரஸ் எப்போது ஒரே குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது, ஊழல் செய்தனர். இப்போது மக்கள் நாடு முழுவதும் அவர்களை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்துள்ளனர். எங்கெல்லாம் தவறுதலாக காங்கிரஸ் அரசு அமைந்ததோ, அங்கெல்லாம் மாநிலத்தை கொள்ளையடிப்பதில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே போட்டி நடக்கிறது. அதற்கு உதாரணம் கர்நாடகா.

இப்போது மத்திய பிரதேசத்தில் அவர்கள் வெற்றி பெற துடிப்பதற்கு காரணம், மக்களவை தேர்தல் நிதிக்காக மபியை தனது ஏடிஎம் ஆக்க காங்கிரஸ் விரும்புகிறது. இங்கு அரசின் பணத்தை கொள்ளையடிக்க துடிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.மிசோரமில் வீடியோ பிரச்சாரம்: மிசோரம் மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி நேற்றுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்தது. மற்ற 4 மாநிலத்திலும் நேரில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மிசோரம் மாநிலத்தை மட்டும் தவிர்த்தார். கடைசி நாளான நேற்று நேரில் வராமல் வீடியோ மூலம் அவர் பிரசாரம் செய்தார்.

Related posts

புதுக்கோட்டை ரவுடி என்கவுன்ட்டர் விவகாரம்: போலீசார் விளக்கம்

65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கியது

ஜூலை-12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை