மக்களவை தேர்தலில் சிபிஐ-க்கு நாகை, திருப்பூர் ஒதுக்கீடு… பிரதமர் மோடி ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை என முத்தரசன் சாடல்!!

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொகுதிப் பங்கீடு இறுதியானது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் -இந்தியட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (12.3.2024) தீர்மானிக்கப்பட்டது. தொகுதிகளின் விவரம்: 1.நாகை 2. திருப்பூர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முத்தரசன், ““மக்களவை தேர்தலில் நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தது. பிரதமர் மோடி கொடுத்த ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை. மதரீதியாக மக்களை பிளவுபடுத்த அரசியல் ஆதாயம் தேடும் குறுகிய நோக்கத்தோடு பாஜக செயல்படுகிறது. மக்களின் கவனத்தை திசைத்திருப்ப வேண்டும் என்பதற்காக CAA-வை அமல்படுத்தியுள்ளனர். நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில்தான் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது!” என்றார்.

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்