சென்னை : மக்களவை தேர்தலை ஒட்டி சென்னையில் அனைத்துக் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடமும் கருத்துகளை கேட்டறிந்து ஆலோசனை நடத்தப்படுகிறது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.