மக்களவையில் ஒடுக்கப்பட்டவரின் குரலாக ராகுல் இருப்பார்: ஆதித்ய தாக்கரே நெகிழ்ச்சி

மும்பை: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி மக்களவையின் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு சிவசேனா தலைவர்(யூபிடி) ஆதித்ய தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘மக்களவையில் எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்தி ஜீக்கு வாழ்த்துக்கள்.

இந்த நாட்டின் மக்கள் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும், வெறுப்பின் பிரித்து ஆளும் அரசியலுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். ஒடுக்கப்பட்டோருக்கு ராகுல்காந்தி குரல் கொடுக்க இருப்பதால் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய கூட்டணியானது ஏற்கனவே எதிர்கட்சியாக தனது பங்கை திறம்பட செய்துள்ளது. விரைவில் இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்” என்றார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை