14 மக்களவை சீட் + 1 மாநிலங்களவை எம்.பி பதவி தரும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் : பிரேமலதா அறிவிப்பு

சென்னை :தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,”தேமுதிக சார்பில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய அனைத்து தரப்பினருக்கும் நன்றி. கேப்டன் அடக்கம் செய்யப்பட்ட இடம் கேப்டன் விஜயகாந்த் கோவில் என கூகுளில் வருகிறது. அரசு மரியாதையுடன் கேப்டனின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தேமுதிக தனித்து களம் காண வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்தனர்.மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் தரும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும்.

14 மக்களவைத் தொகுதி, 1 மாநிலங்களவை சீட் தருவோரிடம் கூட்டணி வைக்க விரும்புகிறோம். 2014 மக்களவைத் தேர்தல் போல் தொகுதிகளை பங்கீடு செய்யும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். பிப். 12ம் தேதிக்குள் தேமுதிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம். வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் குறித்து இனிமேல் தான் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். 4 மண்டலங்களிலும் தேமுதிக சார்பில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். எந்த கூட்டணி இதுவரை தேர்தல் கூட்டணி முடிவை எடுக்கவில்லை.

இதுவரை யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாங்கள் பேசவில்லை.முந்தைய தேர்தல்களில் தேமுதிக பலத்தை நிரூபித்துள்ளது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைக்கப்படும். தேமுதிகவிடம் கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம். கட்சி தொடங்கும்போது தேமுதிகவின் சித்தாந்தம், கொள்கைகளை விஜயகாந்த் அறிவித்துவிட்டார். விஜயகாந்த் அளவுக்கு இதுவரை எந்த கட்சிகளும் தங்களது கொள்கைகளை அறிவிக்களில்வை. புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். தேமுதிக லஞ்சம், ஊழலற்ற கட்சி என்பதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்