மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரையில் தவறு இருப்பதாகக் கூறி அவருக்கு எதிராக சபாநாயகரிடம் பாஜ சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சுஷ்மா சுவராஜ் மகளும், டெல்லியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டவருமான பன்சூரி ஸ்வராஜ் இந்த நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

இதுபற்றி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில்,
‘சபையை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எந்த உறுப்பினரும் எளிதில் தப்பிக்க மாட்டார்கள்.சபை விதிகள்படி அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உண்மைகள், புள்ளிவிவரங்கள் உட்பட பல விஷயங்களில் தொடர்ந்து பொய் கூறியது தொடர்பாக ​​சபாநாயகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அவரது நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம். சபை விதிகள் அனைவருக்கும் சமமாக பொருந்தும். இதில் இருந்து எவரும் தப்பிக்க எதிர்பார்க்க முடியாது. சபையை தவறாக வழிநடத்த விரும்பினால், அவர் எளிதில் தப்ப முடியாது’ என்றார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு