மக்களவை தேர்தலில் போட்டியின்றி வென்ற சூரத் எம்பிக்கு சம்மன்: குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜ சார்பில் முகேஷ் தலால், காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பானி உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தனர். கடைசி நேரத்தில் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றதால், 12 ஆண்டுக்குப் பிறகு சூரத் தொகுதியில் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜே.சி.தோஷி, வரும் ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் பதிலளிக்க சூரத் எம்பி தலாலுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.