மக்களவை தேர்தல் எதிரொலி: பறை அடித்து வாக்குசேகரித்த திமுக வேட்பாளர் மலையரசன் செயலால் உற்சாகமடைந்த வாக்காளர்கள்

ஆரணி: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரமானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் போட்டியிடுகிறார். தினந்தோறும் வாக்காளர்களை கவர நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஜி.வி.கஜேந்திரன் இன்றைய தினம் துணிகளுக்கு இஸ்திரிபோடும் தொழிலாளியாக மாறினார். அருணகிரி சத்திரம் பொன்னுசாமி சாலையில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் திடீரென ஜீப்பில் இருந்து இரங்கி அங்கிருந்த இஸ்திரி கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்தவர்களை கவர துணிகளுக்கு இஸ்திரி போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் தேர்தல் பரப்புரையின்போது இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார்.

அன்னூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஜெயக்குமார் கோவை மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர்களுடன் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக வேட்பாளர் மலையரசன் தியாகதுருவம் அருகே பொதுமக்களுடன் இணைந்து பறையிசை அடித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டது வாக்காளர்களை கவர்ந்தது. திமுக வேட்பாளர் மலையரசன் சாத்தனூர், சிடேறி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது குகையூர் கிராமத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய இசையான பறையிசை அடித்து பொதுமக்களை உற்சாகபடுத்தி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார். ஓத்தே போல சாத்தனூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது சிறுமி ஒருவர் வேட்பாளரின் பிரச்சார வாகனத்தில் ஏறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார்.

 

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!