நெருங்கும் மக்களவை தேர்தல்; வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டும் பாஜ

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ விரைவில் வௌியிட உள்ளது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜ தீவிரம் காட்டி வருகிறது. பாஜ வேட்பாளர்கள் குறித்து தெலங்கானா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் மாநில பாஜ தலைவர்களுடன் அமித் ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ஏற்கனவே தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இதையடுத்து பாஜவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா ஆகியோரது பெயர்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் நடைபெற உள்ள பாஜ மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வௌியிட பாஜ திட்டமிட்டுள்ளது.

Related posts

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு