அதிமுக போட்டியிட்ட 33 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடம்..!!

சென்னை: அதிமுக போட்டியிட்ட 33 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. அவ்வகையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 அன்று முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைப்பெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் தென் சென்னை, கோவை, தருமபுரி, மதுரை, நீலகிரி தொகுதிகளில் அதிமுக 3ஆம் இடம் பிடித்துள்ளது. கன்னியாகுமரியில் அதிமுக 4ஆம் இடத்திலும் 20 தொகுதிகளில் அதிமுக 2ஆம் இடத்திலும் உள்ளது. அதிமுக போட்டியிட்ட 33 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்தில் உள்ளது. ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளரை மூன்றாம் இடத்திற்கு தள்ளி 2ஆம் இடத்தில் ஒபிஎஸ் உள்ளார்.

 

Related posts

வங்கதேச நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

டெல்லி வந்தடைந்தார் ஷேக் ஹசீனா

தமிழ்நாடு காங். சார்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வயநாடு அனுப்பிவைப்பு: செல்வப்பெருந்தகை