மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது: தேர்தல் கருத்துக்கணிப்பு நிபுணர் பிரசாந்த் கிஷோர்

டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது தேர்தல் கருத்துக்கணிப்பு நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனி எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பாஜக அதன் 2019 செயல்திறனைப் பிரதிபலிக்கும், சுமார் 300 இடங்களைப் பெறும் என்று கிஷோர் கணித்திருந்தார். தேர்தல் முடிவுகள் அவரது கணிப்புகளிலிருந்து விலகின. பாஜக 240 மக்களவைத் தொகுதிகளை வென்றது, அதன் 2019 எண்ணிக்கையை விட 20 சதவீதம் குறைவு. முக்கியமான 272 புள்ளிகளைக் கடந்து, அதன் NDA கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக பெரும்பான்மையை உருவாக்கியது.

இதனை அடுத்து வருங்காலத் தேர்தல்களுக்கான எண் கணிப்புகளைத் தொடர்வீர்களா என்று கேட்டதற்கு, பதிலளித் கிஷோர்: “இல்லை, நான் இனி தேர்தலில் இடங்களின் எண்ணிக்கை குறித்து கூறப்போவதில்லை. நான் எனது மதிப்பீட்டை உங்கள் முன் வைத்துள்ளேன், எண்ணிக்கை அடிப்படையில் நான் செய்த மதிப்பீடு 20 சதவிகிதம் தவறானது. பாஜக 300-ஐ நெருங்கிவிடும் என்று நாங்கள் சொன்னோம், அவர்களுக்கு 240 கிடைத்தது என கூறினார்.

Related posts

செங்கல்பட்டில் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

ஆயிரம் ஆண்டு பழமையான பெரிய கோயிலில் கண்காணிப்பு கேமரா செயல்படுமா?

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கியதில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு