மக்களவைத் தேர்தல்: ஆன்லைன் விளம்பரத்துக்கு பாஜக ரூ.37 கோடி செலவு.. காங்கிரஸின் விளம்பரச் செலவை விட 300 மடங்கு அதிகம்..!!

டெல்லி: வரும் மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆன்லைன் விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.37 கோடி செலவிட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை விட 300 மடங்கு அதிகமாகும். கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆன்லைன் விளம்பரங்களுக்காக அரசியல் கட்சிகள் ரூ.102.70 கோடி வரை செலவு செய்துள்ளதாக மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இணைய விளம்பரங்களுக்கு அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சி ரூ.37 கோடி செலவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதற்காக செலவிட்டிருக்கும் தொகை ரூ.12.20 லட்சம் மட்டுமே.

இதை பாரத நியாய் யாத்திரையில் ராகுல் காந்தியின் பேச்சை பிரபலப்படுத்த மட்டுமே செலவிடப்பட்ட ரூ.5 லட்சமும் அடக்கமாகும். இணையதள விளம்பரங்களுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியை விட 300 மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளது. பாஜக-வுக்கு அடுத்ததாக ஆன்லைன் விளம்பரத்துக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ரூ.4 கோடி செலவிட்டிருக்கிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி ரூ.51 லட்சம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ரூ.39.50 லட்சமும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.27 லட்சத்தையும் செய்துள்ளன.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது