சென்னை: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் 50 சதவீதத்துக்கு மேல் அதாவது 11 புதுமுகங்கள் போட்டியிடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தருமபுரி – ஆ.மணி, ஆரணி தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி மலையரசன், சேலம் செல்வகணபதி, ஈரோடு – கே.ஏ.பிரகாஷ், கோவை கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, பெரம்பலூர் அருண் நேரு, தஞ்சாவூர் முரசொலி, தேனி – தங்க தமிழ்ச்செல்வன், தென்காசி ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.