உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதுக்கோட்டை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் இன்று அளித்த பேட்டி:
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பதற்கு எனது ஆட்சி காலத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு எல்லோருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. மாநாடு உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கு யார் அனுமதி கேட்டாலும் கொடுப்பது மரபு. எங்கள் ஆட்சி காலத்தில் எல்லா கட்சிகளும் போராட்டம், மாநாடு நடத்த அனுமதி கொடுத்தோம்.

பாஜக குறித்து எனது கருத்தை நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன். இனி இந்த விவகாரத்தில் அரைத்த மாவை அரைக்க வேண்டியதில்லை. உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, அதை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெண் குழந்தைகள் தின விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்