ஆர்.கே.பேட்டை அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை அருகே பாலாபுரம் அரசு கால்நடை மருந்தக எல்லைகுட்பட்ட சேதுராகவபுரம், செங்கட்டானூர், சானூர்மல்லாவரம் ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு அரசின் சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

இம்முகாமை திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் தாமோதரன் துவக்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் ரவிச்சந்திரன், பக்ருதீன் அலி அகமது, கால்நடை பராமரிப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமி ஸ்டாலின் உதவியாளர் கோவிந்தசாமி ஆகியோர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை மலட்டுத்தன்மை சிகிச்சை என பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இம்முகாமில், மொத்தம் 1,136 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. மேலும் கலப்பின கிடாரிகள் பேரணி நடத்தி, சிறந்த கலப்பின கன்றுகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும் சானூர் மல்லாவரத்தில் நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 883 கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது