வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய டெல்லி செல்கிறேன் காங்கிரஸ் தேர்வு குழுவுடன் விவாதித்து இன்று இரவுக்குள் வெளியிடப்படும்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில் கடந்த 3 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. அதோடு விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான விருப்ப மனுக்களும் பெறப்பட்டது. இந்த மனுக்கள் தொடர்பாக ஆய்வு செய்ய மாநில தேர்தல் குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.

பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான 3 வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்ய இன்று(நேற்று) மாலை டெல்லி செல்கிறேன். அங்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி ஹரி சவுத்ரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு குழுவுடன் விவாதிக்கப்படும். இதை தொடர்ந்து நாளை(இன்று) மத்திய தேர்தல் குழு தலைவர்கள் கூடி அதில் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் பெயர்களை நாளை(இன்று) இரவுக்குள் அறிவிக்கப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் வரவேற்புக்குரியதாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நினைத்ததை திமுக தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளது. அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோரை வைத்துக் கொண்டு குடும்ப அரசியலை ஒழிப்பேன் என பாஜ தலைவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோரை வைத்துக் கொண்டு குடும்ப அரசியலை ஒழிப்பேன் என பாஜக தலைவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

Related posts

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு