அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்படுவதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட நான்கு பார்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலால் துறை, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் பார்கள் செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர்கள் அமைக்கும் குழுக்கள் சட்ட விதிகளை பின்பற்றி சோதனைநடத்த வேண்டும் என்றுதீர்ப்பு கூறினர்.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!