கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமானவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): கள்ளக்குறிச்சி துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): கள்ளக்குறிச்சி சம்பவத்தை அறிந்தவுடன், இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஜவாஹிருல்லா (மமக தலைவர்: கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முஜிபுர் ரஹ்மான் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர்): கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பூரண மதுவிலக்குக்கான செயல்திட்டங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை