மதுராந்தகம் அருகே அத்திமனம் பகுதியில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து..!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அத்திமனம் பகுதியில் 2 அரசு பேருந்துகள், கார், லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமனம் என்ற பகுதியில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு 30 நிமிடத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி செல்லக்கூடிய சாலையில் பெட்ரோல் ஏற்றிவந்த லாரியானது சாலையை வேகமாக கடந்த போது லாரியை பின் தொடர்ந்து வந்த கார் ஆனது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காரை பின்தொடர்ந்து வந்த இரண்டு அரசு பேருந்துகளும் அடுத்தடுத்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் காரானது அப்பளம் போல் நொறுங்கி கோர விபத்து ஏற்பட்டது.

இரண்டு அரசு பேருந்தில் 100கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 5 பேரையும் முதலுதவிக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்பட்ட வாகனங்களை சாலையோரமிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை