மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அதே வழக்கில் சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் ஜூலை 12ம் தேதி வரையில், அதாவது 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி கடந்த 29ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ என்னை கைது செய்து சிறையில் அடைத்தது ஆகியவை அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாகும். எனவே சிபிஐ அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் அவசர வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்