மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் நடந்த பணமோசடி முறைகேடுகள் குறித்து சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலையொட்டி கடந்த மே 10ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்த காலஅவகாசம் முடிந்த நிலையில் ஜூன் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதைஎதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்து, தீர்ப்பை கடந்த 21ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்