மபியை அதிர வைத்த இணைப்பு சிந்தியாவின் ஆதரவாளர்பா.ஜவில் இருந்து விலகல்: 400 கார்களுடன் 300 கிமீ பயணம் செய்து மீண்டும் காங்கிரசிற்கு தாவினார்

போபால்: மபி காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த சிந்தியா ஆதரவாளர் பைஜ்நாத்சிங் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மபியில் 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது. கமல்நாத் முதல்வரானார். அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் 24 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜவில் இணைந்தனர். இதனால் மீண்டும் பா.ஜ ஆட்சியை கைப்பற்ற சிவராஜ்சிங் சவுகான் முதல்வர் ஆனார்.

இந்த ஆண்டு இறுதியில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல், கர்நாடகாவை தொடர்ந்து ஆட்சியை பா.ஜவிடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அதன் முதற்கட்டமாக ஜோதிராதித்யாவின் முக்கிய ஆதரவாளரும், காங்கிரசில்இருந்து 2020ம் ஆண்டு விலகியவருமான பைஜ்நாத்சிங் நேற்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.அதுவும் மபியின் ஷிவ்புரியில் இருந்து போபால் வரை சுமார் 300 கிமீ 400 கார்களில் தொண்டர்படையுடன் சென்று கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். சைரன்கள் ஒலிக்க 400 கார்களின் அணிவகுப்பு மபியை தற்போது அதிர வைத்துள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

Related posts

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்

ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

கிராமப்புறங்களில் ரூ.500 கோடியில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைப்பு: அரசாணை வெளியீடு