நிதிஷை போல் அதிமுகவும் மாறலாம் பாஜவின் சந்தர்ப்பவாத கதவுகள் திறந்தே இருக்கும்: மார்க்சிஸ்ட் கணிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி திருவட்டார் அருகே அருவிக்கரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கியும், பாஜவுக்கு எதிரான கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு குறைவான நிதியையும் ஒன்றிய அரசு வழங்குகிறது. மாநில அரசுகளுக்கு கெட்ட பெயரை உருவாக்கி, மோடியால் தான் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தமிழகத்தில் அதிமுக மீண்டும் பாஜவுடன் கூட்டணியில் சேராது என்று உறுதியாக கூறமுடியாது.

ஏதாவது தகடுதந்தங்களை செய்தாவது தமிழகத்தில் பாஜ கால் ஊன்ற முயல்கிறார்கள். நிதீஷ்குமார் பாஜவுடன் சேருவதைவிட செத்துவிடுவேன் என்றார். அமித்ஷா கதவுகள் மூடபட்டது என்றார். இறுதியில் என்ன நடந்தது சந்தர்ப்பவாத கதவுகள் பாஜவில் திறந்தே இருக்கும். நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்தை பொறுத்தவரையில் விவசாயிகள், பெண்கள் குறித்த அவர்களது கொள்கை நோக்கம் என்ன என்பது குறித்து வெளியிடபட்டால் தான் கருத்துகளை கூறமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கடந்த 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்: ஒசூரில் பரபரப்பு