கலைஞரை போல அவரின் எழுத்துகளும் தமிழ் மக்களுக்கு சொந்தமாகின்றன: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கலைஞரை போல, அவரின் எழுத்துகளும் தமிழ் மக்களுக்கு சொந்தமாகின்றன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: கலைஞர் எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்படும் என்ற தித்திப்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதன்மூலம், கலைஞரை போல, அவரின் எழுத்துகளும் தமிழ் மக்களுக்கு சொந்தமாகின்றன. இலக்கியம், நாடகம், திரைப்பட வசனம், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுத்துத் துறையின் எல்லா கோணங்களிலும் கோலோச்சியவர் கலைஞர்.

ரத்தம் தந்து உயிரைக் காப்பது போல-கலைஞரின் பேனா தமிழர்க்கு உணர்வை தந்து உரிமைக் காத்தது. கலைஞரின் படைப்புகள் எல்லாம் நூல் உரிமைத்தொகை இல்லாமல் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞரின் நூல்களை இன்னும் அதிகமாக வாசிக்கவும், கலைஞரின் கருத்துகள் இன்னும் வேகமாகப் பரவவும், இது மாபெரும் வாய்ப்பு. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு