Wednesday, August 7, 2024
Home » துலாம் ராசியினரின் உடல் நோயும் தீர்வும்

துலாம் ராசியினரின் உடல் நோயும் தீர்வும்

by Porselvi

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரனாக இருப்பதால், இவர்களுக்குத் தோல், இடுப்புப் பகுதி மற்றும் பிறப்புறுப்பு சார்ந்த நோய்கள் வர வாய்ப்பு அதிகம். துலாம் ராசியினருக்கு வரும் நோய்களை, உடல் நலம் சார்ந்தவை என்றும், மனநலம் சார்ந்தவை என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்.

உடல் நலம் சார்ந்த நோய்கள்

துலாம் ராசியினருக்கு சிறுநீரகம், அட்ரீனல் சுரப்பி, கீழ் முதுகு, கருப்பை, சிறுநீரகக் குழாய் பாலுறுப்பு நோய்கள் போன்ற சில பிரச்னைகள் தோன்றும். இவர்களின் உடம்பில் உப்பும் புளிப்பும் (alkalIn and acid) சமநிலையில் இருப்பதில் சிரமங்கள் தோன்றும். இதனால், அசிடிட்டி என்று சொல்லப்படும் புளிச் சேப்பம் எதிர்க் களித்தல் போன்ற ஜீரணக் கோளாறு தொடர்பான சிரமங்கள் உண்டாகும். காரம் (அல்கலைன்) எனப்படும் உப்பு சார்ந்த நோய்களும் தோன்றும். இரண்டுக்கும் இடையே சமநிலை இல்லாத காரணத்தினால் உப்புச் சத்து கூடும். இதனால் தோல் கருத்தும் தடித்தும் மாறுதல், உடம்பில் உப்பு அதிகரித்து நீர்ச்சத்து குறைதல், தோல் உலர்ந்து காணப்படுதல் போன்ற வியாதிகள் வரும்.

சிறுநீரகக் கோளாறுகள்

துலாம் ராசியினரின் உடம்பில் சமநிலை ஏற்படுவதில் சிக்கல்கள் உண்டாவதால், உப்பு உடம்பில் உட்கிரகித்துக் (assimilate) கொள்ள இயலாத சூழ்நிலையில் ஆங்காங்கே தங்கிவிடும். மூட்டுகளில் இவ்வாறு தங்கும் போது மூட்டுகளை மடக்கி நிமிர்த்த இயலாமல் சிரமப்படுவார்கள். எலும்பின் அடர்த்தி குறைந்து ஆஸ்ட்டியூரோஸிஸ் நோய் உண்டாகும். சிறுநீரகக் தொற்று ஏற்படுவதும், சிறுநீரக கல் தோன்றுவதும் சகஜம். இவற்றுக்கு இவர்கள் அலோபதி மருத்துவத்தை நாடாமல் சித்த மருத்துவம் அல்லது ஆயுர்வேத மருத்துவத்தில் வழங்கப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

இதர நோய்கள்

இரவு நெடுநேரம் கழித்து 11 மணிக்கு பிரியாணி, புரோட்டா, மட்டன் சுக்கா என்று அதிக அளவில் கொழுப்பு சார்ந்த, எண்ணெயில் பொரித்த அல்லது மைதா உணவுகளைச் சாப்பிடும் துலாம் ராசியினருக்கு செரிமான கோளாறுகள் ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாகும். மற்ற ராசியினரைவிட இவர்களுக்கு சிக்கல்கள் அதிகம். இவர்கள் தங்கள் உடல்நிலை சரியான பிறகு மீண்டும் இது போன்ற உணவு உட்கொள்ளுவர். ஆசையை கட்டுப்படுத்த இயலாத ராசியினர் துலாம் ராசியினர். எனவே இவர்களின் உடல்நலக் கோளாறுகளுக்கு இவர்கள் மட்டுமே காரணம்.

போதை அறவே கூடாது

துலாம் ராசியினர் எக்காரணம் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் போதை வஸ்துக்களை பயன்படுத்தக் கூடாது. இவர்கள் சிறிதளவு பயன்படுத்தினாலும் அதிகளவு போதை தலைக்கு ஏறி தள்ளாடுவர். அந்நேரம் போதையின் பின் விளைவுகள் இவர்களிடம் கடுமையாக இருக்கும்.

இமேஜ் டமால்

சில ராசியினர் எவ்வளவு போதை வஸ்துகள் உட்கொண்டாலும் தன்னிலை தாழாமல் தாக்குப் பிடித்து நிற்பார்கள். துலாம் ராசியினர் அப்படி இல்லை சிறிதளவு உட்கொண்டால்கூட பெரிய அளவில் பாதிக்கப்படுவர். இவர்களை “டி அடிக்சன் சென்டர்களில்’’ (De addiction centre) வைத்து சுகப்படுத்த வேண்டிய நிலை வந்துவிடும்.

பெண்களுக்கு வரும் வியாதிகள்

துலாம் ராசி பெண்களுக்கு, சிறுநீரகத் தொற்று, கருப்பைத் தொற்று, மற்றும் பெண்கள் சார்ந்த நோய்கள் வர வாய்ப்புண்டு. மற்ற ராசியினரைவிட இவர்களுக்கு இவ்வாய்ப்புகள் சற்று கூடுதலாகவே இருக்கும். தோல் உலர்ந்து போகும். மேலும், சுக்கிரன் வலுவாக இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்னைகள் இருக்காது. குழந்தை பேறு உடனே உண்டாகும். பிரசவம் மிக எளிதாக இருக்கும்.

தீர்வு என்ன?

துலாம் ராசி, துலாம் லக்னத்தைச் சேர்ந்தவர்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாகவோ அல்லது வலிமை குன்றியோ பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ இருப்பவர்கள் சுக்கிரன் ஸ்தலமான ரங்கத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதும், நோய்க்கான மருத்துவம் பலன் தர உதவும். வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு, சர்க்கரைப் பொங்கலை அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு வழங்குவதால், மருத்துவம் பலன் அளிக்கும். ஆண்களும் இத்தகைய பரிகாரங்களை செய்யலாம். துலாம் ராசியினருக்கு வரும் மன நோய் பற்றி அடுத்த கட்டுரையில் அறியலாம்.

You may also like

Leave a Comment

five × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi