விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் மறைவுக்கு வைகோ இரங்கல்

சென்னை: உஞ்சை அரசன் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் கவிஞர் உஞ்சை அரசன் திடீர் மறைவுச் செய்தி கேட்டு, ஆறா துயர் அடைந்தேன். தலித் பண்பாட்டுப் பேரவை, தமிழக தாழ்த்தப்பட்டோர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் வாயிலாகவும் உஞ்சை அரசன் சமூக நீதிக்காகப் போராடினார். மனுசங்க என்ற இதழும், எகிரு என்ற சிறுகதைத் தொகுப்பும் அவரின் எழுத்தாற்றலை உலகுக்குப் பறைசாற்றியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சிக்கு இவர் பாடுபட்டாலும், அந்தக் கட்சியின் மகளிர் அணியைக் கட்டமைப்பதிலும், மகளிர் மாநாடுகளை நடத்துவதிலும் இவர் மிகச் சிறப்பாக பாடுபட்டார். உஞ்சை அரசன் அவர்களின் மறைவு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் அனைவருக்கும் பேரிழப்பாகும். இவரது பிரிவால் துயரத்தில் இருக்கும் இவரின் வாழ்க்கைத் துணைவியார் மற்றும் குடும்பத்தினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சகோதரர் திருமாவளவன், அந்தக் கட்சியின் தோழர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related posts

நடப்பு நிதியாண்டில் திருச்சி, கோவையில் ஸ்டார்ட்அப் மையம்

ஒரே நேரத்தில் தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்தாண்டு முதல் புதிய நடைமுறை: கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்கள்