விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுபான கடையை மூட கோரி போஸ்டர்

செங்கல்பட்டு: மறைமலைநகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டது. இதில், புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடைக்கு அருகே குடியிருப்புகள், கோயில்கள், தேவாலையங்கள், பள்ளி என 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மதுபான கடையை திறக்க கூடாது என மறைமலைநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் மனு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், மறைமலைநகர் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக மதுபான கடைக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், தமிழக அரசும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் மறைமலைநகர் பகுதியில் ஏற்கனவே இரண்டு அரசு மதுபான கடைகள் உள்ளநிலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுபான கடைகளை மூட வேண்டும். இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்ற வாசகங்கள் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்களில் எழுதபட்டுள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி