அவதூறு வழக்கில் செப்.13ல் ஆஜராக வேண்டும்: சபாநாயகர் அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு எம்பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் அனுப்பிய சம்மனை, சபாநாயகர் பெற மறுத்து விட்டதாக பாபு முருகவேல் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, அப்பாவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், சம்மனை நிராகரிக்கவில்லை. நீதிமன்றம் குறிப்பிடும்நாளில் ஆஜராக தயாராக உள்ளோம் என்றார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை 13ம் தேதிக்கு தள்ளிவைத்த சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் நேரில் ஆஜராகுமாறு சபாநாயகர் அப்பாவுக்கு உத்தரவிட்டது.

Related posts

முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து..!!

கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!!