மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடந்த LGBTQ+ சமூகத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருந்து மருத்துவ மாணவர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர். சமூக செயற்பாட்டாளர் அழகுஜெகன் பேசும்போது மாணவர்களை நிர்வாகம் வெளியேற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை இங்கு நடத்தக்கூடாது எனக்கூறி கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.