தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைப்பெற்றது. செங்கல்பட்டில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுதும் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக செங்கல்பட்டு அரசு செவிலியர் கல்லூரி மாணவ – மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் ஸ்பார்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் சார்பில், ‘களங்கம் தவிர்ப்போம் கண்ணியம் காப்போம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தினர். இந்த பேரணியை செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பாஸ்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், நிலைய மருத்துவ அலுவலர் முகுந்தன், தொழுநோய் பிரிவு துறைத்தலைவர் சாரதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை